
அழைக்கிறாய் நீ..
வேண்டுதலோ..
விருப்பமோ..
கட்டளையோ..
ஏதுமற்று
அது என் கதவை தட்டுகிறது.
ஜன்னலில் எட்டி பார்க்கிறது..
குறுகுறுப்பாய்
வீட்டை சுற்றி வந்து
வாசலில் படுக்கிறது
ஒரு நாய் குட்டியாய்..
சேமித்து வைத்த
பழஞ்சோகங்களை
அலுமினிய தட்டில் வைக்கிறேன்.
இளைப்பினூடே
உண்கிறது
என் புண்களை
உன் நினைவு.
நினைவுகள், வீட்டைவிட்டு தூரமாய்ப் போய் விட்டு வந்த நாய்க்குட்டி மாதிரி. அழுது புரண்டு எப்படியேனும் மீண்டும் வீடு வந்து சேர்ந்து விடும். ஆனால் அது ஏற்படுத்தும் வலி, மிகக் கொடுமையானது.
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
நன்றாக இருக்கிறது
ReplyDelete-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா