
கெட்டித்த மேலோட்டை
மென்மையாக்கி
மனதிடை புகுந்த
பார்வை மத்தால்
கனவொரு பக்கமும்
நினைவொரு பக்கமும்
நீயே நின்று
காதலை கடைந்ததன்
முடிவில் திரண்ட
அமிழ்தத்தை
அள்ளி அள்ளி பருகிவிட்டு
ஆலகாலத்தை
எனக்கு தந்துவிட்டுப்போகிறாய்..
ஒற்றை கையால்
கண்டத்தை இறுக்கி
மறுகையால்
நானெழுதிய
கவிதையெங்கும்
பாரித்திருக்கிறது நீலம்.
நுரைத்து வழிகிறது
உனக்கான
காதல் சொட்டும்
வாசகங்கள்.
//கவிதையெங்கும்
ReplyDeleteபாரித்திருக்கிறது நீலம்.
நுரைத்து வழிகிறது
உனக்கான
காதல் சொட்டும்
வாசகங்கள். //
ரொம்ப அழகான வரிகள்....
அன்புடன் அருணா
இலக்கியக் கூடலில் இந்தக் இக்கவிதையை வாசித்தளித்த உங்கள் குரல் இன்னும் என்னோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
ஆம் சேரல் குரலும் தொனியும்..கவியின் ஆளுமைகள்..
ReplyDeleteகவிஞன் குருடாக இருந்துவிடலாம்...
ஊமையாகிவிடுவது எவ்வளவு கொடுமை..!
எழுதுவரைதான் அவன் ஊமை
அதன் பின் அவன் எக்காளமல்லவா..?
//கவிஞன் குருடாக இருந்துவிடலாம்...
ReplyDeleteஊமையாகிவிடுவது எவ்வளவு கொடுமை..!//
அருமை! பினூட்டத்திலும் கூட கவிதை மிளிர்கிறது. நீங்கள் சொன்னது போல வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது கவிதை.
இலக்கியக்கூடல் பற்றிய என் கருத்துகளை என் வலைப்பூவில் இட்டிருக்கிறேன்.
உங்கள் கருத்தினை எதிர்பார்க்கிறேன்.
http://seralathan.blogspot.com/
-ப்ரியமுடன்
சேரல்
அருமையான கவிதை நண்பா !
ReplyDelete