Thursday, April 23, 2009

ஆப்பிள் தின்ற நாள் முதல்...




என் உயிருக்கு 
அவசியப்படும் 
அந்த ஒன்றை... 
சிறுபிள்ளை போல்.. 
எங்கோ உனக்குள் 
ஒளித்துவைத்துக்கொண்டு... 
வழிமட்டும் காட்டுவேன்.. 
தேடி கண்டடையென.. 
நீ களமிறக்குகிறாய் என்னை.., 

குறுகிய இடுக்கினில் 
மெல்ல நுழைந்து.. 
அடியும்..முடியும்.. 
ஒருசேர தேடி.. 
பயணம் நீள... 
என் சாதகத்தை 
வேதனையாய் கருதினாயோ.என்னவோ... 
ஒளித்தவிடத்திலிருந்து.... 
நான் தேடி வந்ததை... 
அள்ளி..அள்ளி.. 
நீயே தருகிறாய்.., 

நான் உனக்கு தருவதும்.. 
உன்னிடமிருந்து 
நான் பெறுவதுமான 
இந்த 
விளையாட்டில் மட்டுமதான்.. 
வெற்றி வாய்க்கிறது... 
எதிர்த்துப் போட்டியிடும் இருவருக்கும். 

வெற்றிக்கோப்பை 
ஏந்திய களிப்பில் 
ஒன்றாய் கலந்து இழைகிறது.. 
நம்..ஒற்றை சுவாசம். 

2 comments:

  1. பாடு பொருள் பழையது என்றாலும் ரசிக்க முடிகிறது உங்கள் எழுத்துகளில். பழையது என்று ஒதுக்கி விடவும் முடிவதில்லை. உணர்கிற ஒவ்வொருவரிடமும் புதியதாகி விடுகிறது அது.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. உண்மைதான் சேரல்..பாடு பொருள் மட்டுமல்ல..இக்கவிதையே பழையதுதான்...
    23 ஆம் வயதாய்
    வாழ்வை துவங்கியிருக்கும்..
    43 ஆம் வயதுக்காரன் நான்..

    ReplyDelete

Blog Archive

Followers